இப்பிடி ஒரு சோகமா? பிறந்தநாளில் இஷாந்த் சர்மாவுக்கு

மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது பிறந்தநாளில் சோகமான சாதனை படைத்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் சவுத்தாம்டனில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள், இந்தியா273 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 271 ரன்களுக்கு[ ஆல் அவுட்டாகி இந்திய அணி 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் இதில் இந்திய அணி, 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா , ‘டக்’ அவுட்டானார். இதன் மூலம் பிறந்தநாளில் ‘டக்’ அவுட்டான மூன்றாவது இந்திய வீரர் என்ற சோகமான சாதனை படைத்தார்.

பிறந்தநாளில் ‘டக்’ அவுட்டான இந்திய வீரர்கள்:

சையது கிர்மானி, 1978 (29வது பிறந்தநாள்)
வெங்கடப்பதி ராஜூ, 1996 (29வது பிறந்தநாள்)
இஷாந்த் சர்மா, 2018 (30வது பிறந்தநாள்)